October 30, 2007
ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார் அருண் விஜய்.
நடிகர் அர்ஜுன் தயாரித்த தவம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த இளம் நடிகர் மீண்டும் திரையில் ஜொலிக்கிறார். தவம் திரைப்படம் அருண் விஜயின் திறமைக்கு நல்ல சாட்சியாக அமைந்ததோடு அவர் ஒரு வளரும் நடிகராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தன் அடுத்த படத்துக்கு திட்டமிடும் அருண் விஜய், தன் தந்தை விஜய்குமார் தயாரிக்கும் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாரிக்கப்படும்.
Â