October 30, 2007
பரத் தன் அடுத்த படத்துக்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ஜோடி சேர்கிறார்.
கோலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களை தொடர்ந்து அளித்துவரும் சூப்பர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவர்தான் பரத்தின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
பரத் இப்போது தன் மூன்று வேடங்களில் நடிக்கும் நேபாளி திரைப்பட படபிடிப்பில் தீவிரமாக உள்ளார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்ததும் இவர் சுரேஷ் கிருஷ்ணாவின் படப் பணிகளில் ஈடுபடுவார்.
படத்துக்கு இசையமைக்க ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துவிட்டார் இயக்குநர்.
திரையில் பரத்-சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக நிச்சயம் அமையும்.
Â