October 30, 2007
தாம் தூம் படக் கதாநாயகி கங்கனா ரௌனத்துக்கு கோலிவுட்டில் பணியாற்றுவதில் ஏகப்பட்ட சந்தோஷம். ஒவ்வொரு வருடமும் ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க இந்த நடிகைக்கு ஆசையாம்.
ஜீவாவின் தாம் தூம் படம் மூலம் தென்னிந்தியாவுக்கு அறிமுகமாகிறார் கங்கனா. சமீபத்தில் கலாட்டா.காமுடன் பேசிய கங்கனா, ரவியை எக்கச்சக்கமாக புகழ்கிறார். தென்னிந்தியாவில் தன்க்கு பிடித்த நடிகர் ரவி என சொல்லும் கங்கனாவுக்கு ரவியுடன் இன்னொரு படம் இணைந்து நடிக்க ஆசையாம்.
இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் லக்ஷ்மி ராய் மற்றும் மரியா என்ற ரஷ்ய நடிகை ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பகுதி மாஸ்கோவில் படமாக்கப்பட்டுள்ளத&