October 30, 2007
சூர்யா, சமீரா, திவ்யா உட்பட வாரணம் ஆயிரம் படக்குழு நேற்று இரவு அமெரிக்காவுக்கு பறந்தது. கலிஃபோர்னியா பெர்க்லி பலகலைக் கழக வளாகத்தில் சில காட்சிகளை படம்பிடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் சில படபிடிப்பு சென்னையிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தில் அப்பா, மகன் என சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல். இது சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் மூன்றாவது படம். முந்தைய இரண்டு படங்கள் பேரழகன் மற்றும் தீபாவளிக்கு திரைக்கு வரும் வேல்.
வாரணம் ஆயிரம் படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் தாமரை. கௌதம் மேனன் இயக்கும் இப்படம் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான அனு