October 31, 2007
இந்த நாளைய ரீமிக்ஸ் வழக்கப்படி பழைய பாடல், 'ஓ ரசிக்கும் சீமானே' என்ற பாடலை பெருமாள் படத்துக்காக ரீமிக்ஸ் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.
பெருமாள் திரைப்படத்தில் சுந்தர் C., நமிதா மற்றும் கருப்பசாமி குத்தகைதாரர் படப் புகழ் மீனாக்ஷி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறார் சுந்தர் C. இப்படத்தில் விவேக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பெருமாள் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மூன்று பாடல் காட்சிகளை படம்பிடிப்பதற்காக படக் குழுவினர் விரைவில் மொரிஷீயஸ், மலேசியாவிற்கு பறக்கின்றனர். பெருமாள் படத்தின் இயக்குநர் வின்செண்ட் செல்வா.