சிம்பு ஆரம்பத்திலிருந்தே நடிகர்தான். இளம் வயது முதலே இவர் தன் தந்தையின் பல படங்களில் நடித்துள்ளார். தன் மகனை சினிமா உலகில் ஜொலிக்க வைக்க அவரின் தந்தை விஜய் T. ராஜேந்தர் தனி முயற்சிகள் மேற்கொண்டார். இன்று திரையுலகில் சிம்புவுக்கென்று தனியிடம் இருக்கின்றது. சிம்புவின் நட்சந்திர அந்தஸ்து உறுதியாகிவிட இப்போது இளைய மகன் குறளரசனை நடிகனாக்கும் முயற்சியில் உள்ளார் தந்தை.
குழந்தை நட்சத்திரமாக அண்ணனைப் போல் அவ்வளவாக பிரபலமாகாத தம்பி குறளரசன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் சிம்புவின் அலை திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார். ப்ன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் குறள் விரைவிலேயே தன் முதல்