October 31, 2007
பாலாவின் நான் கடவுள் படத்தில் மிக நீளமான ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சிதான். இந்தப் பாடல் சுமார் 11 நிமிட நேரம் ஒலிக்கிறது. இப்பாடலுக்கு இசை இசைஞானி இளையராஜா.
தங்களின் முந்தைய திரைப்படங்கள் அனைத்திலுமே பாலா-இளையராஜா கூட்டணி பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் சரி அசத்தியிருக்கிறார்கள். நான் கடவுள் படத்தில் இடம்பெறும் இந்த தனித்துவம் மிக்க பாடலும் உலகம் முழுவதும் உள்ள இளையராஜா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும்.
தீபாவளி காரணமாக நான் கடவுள் படக்குழுவினர் இப்போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டுள்ளனர். நான் கடவுள் படத்தின் கதாநாயகன் ஆர்யா. கதாநாயகி பூஜா.
Â