K.பரத்தின் வள்ளுவன் வாசுகி திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றிய S.A. ராஜ்குமார் இப்போது ஒரு திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். மீசை என்ற வரவிருக்கும் புதிய படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறாராம்.
இன்றைய திரையுலகின் சூழலை நினைக்கும் போது ஒருவருக்கு நினைவுக்கு வரும் வார்த்தை பல்வகைப்படுத்துதல். நடிகர்கள் காமிராவுக்கு பின்னால் போகிறார்கள். காமிராவுக்கு பின்னால் இருந்தவர்கள் திரையில் தோன்றுகிறார்கள். வள்ளுவன் வாசுகி படத்தில் ஒரு பாடல் காட்சியில் S.A. ராஜுகுமார் தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. இந்தப் பாடலை அவரே எழுதி, இசையமைத்து பாடியும் உள்ளார்.