பாரத் சங்கீத் உத்சவ் விழாவுக்காக வாரக் கடைசியில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நடனப் பயற்சி மேற்கொண்டார் நடனக் கலைஞரும் நடிகையுமான ஸ்வர்ணமால்யா. இவர் பாடகி அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து ஜெயதேவின் 'கீத் கோவிந்தம்' என்ற நிகழ்ச்சியை அளிக்கிறார்.
இந்த விழாவுக்காக கொஞ்சம் வித்தியாசமான தேசிய மணம் கமழும் ஒரு நிகழ்ச்சியை அளிக்க விரும்பினார் ஸ்வர்ணமால்யா. இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தானி இசையும் இருக்கும் கர்நாடக இசை மெட்டுக்களும் இருக்கும். ஒடிசி மற்றும் கதக் பாணிகளும் இருக்கும். இதற்கு ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை இரண்டிலும் தேர்ந்த அனுராதா ஸ்ரீராம் பொருத்தமான் தேர்வு.