October 31, 2007
ஆர்யா, பூஜா நடித்திருக்கும் ஓரம் போ திரைப்படம் விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.
ஒரு வருடமாக தயாரிப்பில் இருந்த ஓரம் போ கொஞ்சம் தாமதத்தை சந்தித்தது.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஓரம் போ கதை சுவாரஸ்யமானது. இப்படத்தின் கதாநாயகன் ஓரம் போ படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடிப்பதற்காக ஆட்டோ ஓட்ட சிறப்பாக பயிற்சி மேற்கொண்டாராம். சாலையோர உணவுக் கடை நடத்தும் பெண்ணாக நடிக்கிறார் பூஜா.
ஓரம் போ படத்துக்கு இசை G.V. பிரகாஷ். ஒளிப்பதிவு நீரவ் ஷா. இயக்கம் புஷ்கார் மற்றும் காயத்ரி.
இப்போது ஓரம் போ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுகின்றன. படம் விரைவில் திரைக்கு வரும்.