October 31, 2007
மிகவும் பேசப்பட்ட காதல் திரைப்படத்துக்கு பிறகு பாலாஜி சக்திவேல் அளிக்கும் அடுத்த படம் கல்லூரி.
கல்லூரி படத்தில் கதாநாயகியாக தமன்னா, கதாநாயகனாக புதுமுகம் அகில் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விசு ஒரு குறிப்பிடும்படியான கதாபாத்திரத்தில் நடிப்பதை ரசிகர்கள் ரசிக்கலாம்.
இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாளைய போராட்டம்தான் கல்லூரி கதை. காதல் திரைப்படத்தை போல இப்படமும் வாழ்க்கையை அதன் யதார்த்தங்களுடன் சித்தரிக்கும்.
இசை ஜோஷுவா ஸ்ரீதர். P.C. ஸ்ரீராமின் துணை ஒளிப்பதிவாளர் செழியன் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். கல்லூரி படத்தை இயக்குநர் ஷங்கரின் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.