டூயட் ஃபிலிம்ஸின் வெள்ளித்திரை படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படக்குழு பலி, இந்தோனேஷியாவில் படபிடிப்பில் இருந்தனர். அங்கே படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. உலகின் மிக காஸ்ட்லியான தீவுகளில் ஒன்று பலி என்கிறார் இயக்குநர் விஜி. ஒரு பாட்டில் குடி தண்ணீர் விலை நூறு ரூபாய்க்கும் மேல்! எனவே தயாரிப்பாளருக்கு ஆகியிருக்கும் செலவை நினைத்து பாருங்கள். ஆனால் பாடல்கள் அருமையாக அமைந்திருப்பதால் செலவு பரவாயில்லைதான். மேலும் இரண்டு பாடல்களை படம்பிடிக்க நியூசிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் பறக்கிறது படக்குழு. மேலும் இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவில் இருக்கின்றன.