October 31, 2007
அழகிய தமிழ் மகன் கதாநாயக்ன் விஜய் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர்ஸ்டார் என்கிறார்.
திருவண்ணாமலையில் தன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒரு சமூக சேவை விழாவில் பேசிய விஜய், சூப்பர்ஸ்டாரின் அண்ணாமலை வசனங்களை தான் திரும்பத் திரும்ப பேசி மகிழ்ந்ததை சந்தோஷமாக நினைவு கூர்ந்தார். திருவண்ணாமலை கூட தனக்கு அண்ணாமலை படத்தை நினைவூட்டுவதாக விஜய் சொன்னார்.
விழாவில் 'இளைய தளபதி' விஜய் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள சேவை திட்டங்களை பரிசளித்தார். கூடியிருந்த கூட்டத்தினரை தன் தீபாவளி திரைப்படம் அழகிய தமிழ் மகன் படத்துக்கு ஆதரவளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். போக்கிரி படத்திலிருந்து ஒரு ப