October 31, 2007
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் V. ரவிச்சந்திரன் தயாரிக்கும் ஆனந்த தாண்டவம் படத்தில் அட்டகாசமான நடிகர்கள் நடிக்கின்றனர். படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுகளை கையாண்டு வரும் வெங்கி இப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
கதாநாயகி தமன்னாவின் அப்பாவாக நடிக்கிறார் வெங்கி. இவருக்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை அமீதா நடிக்கிறார். மேலும் இப்படத்தின் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு சித்தார்த் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
புதிய முகங்களை தொடர்ந்து தேடி வரும் தமிழ் சினிமா இப்போது திரைக்கு பின்னால் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கியை திரையில் கொண்டு வந்திருக்கிறது.
Â