October 31, 2007
அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் விநியோக உரிமைகள் இன்னும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன்தான் இருக்கின்றன.
சென்னை உரிமைகளை கல்பதி அகோரம் வாங்கியுள்ளார் என்ற் வெளியான செய்திகளைத் தொடர்ந்து கலாட்டா.காமுடன் தொடர்பு கொண்ட பிரமிட் சாய்மீரா நிறுவனத்தினர் அழகிய தமிழ் மகன் உரிமைகள் தங்களிடம்தான் உள்ளன என்பதை உறுதி செய்துள்ளனர்.
அழகிய தமிழ் மகன் சமீபத்தில் கொஞ்சம் சர்ச்சைகளில் சிக்கியது. இப்போது எல்லாம சரியாகிவிட்டது.
விஜய்-ஷ்ரேயா-நமிதா நடித்திருக்கும் அழகிய தமிழ் மகன் தீபாவளி வாரத்தில் திரைக்கு வந்துவிடும்.