January 3, 2008
தம்பி வெற்றிப் படத்துக்குப் பிறகு மாதவன் - சீமான் இணைந்து வழங்கும் திரைப்படம் வாழ்த்துகள். இதில் பாவனா கதாநாயகி.
இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்திற்கு அழகாக இசையமைத்திருக்கிறாராம் இவர். பாடல்கள் ஜனவரி முதல் வாரம் வெளிவருகின்றன.
படத்தின் வசனங்களில் ஆங்கில வார்த்தைகளே இல்லை என்கிறார் சீமான். கனடாவில் நடந்த ஒரு சம்பவத்தால் படத்தில் ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டார்களாம்.
இப்படத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் ஊழியராக நடிக்கிறாராம் மாதவன். படத்தில் ஆங்கிலத்தை தவிர்க்க இவர் இயக்குநருக்கு வெகுவாக உதவினாராம்.
இப்படத்துக்கு முதலில் வாழ்த்துக்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பிறகு தமிழக முதலம&