January 3, 2008
முன்னாள் கவர்ச்சி ராணி சிம்ரன் மீண்டும் நடிக்கிறார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறாராம்.
தலைப்பு இன்னும் வைக்கப்படாத இப்படம் வடக்கு நோக்கி எந்த்ரம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்காகும். இதில் மலையாள திரைக்கதை எழுத்தாளரும் நகைச்சுவை நடிகருமான ஸ்ரீனிவாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். ஒரு அழகானப் பெண்ணை மணந்துகொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் நிகழும் மாற்றங்கள்தான் படத்தின் கதை.
பாலா மூலம் நந்தா படத்தில் அறிமுகமான கருணாஸ் இப்படம் குறித்து மிக உற்சாகமாக இருக்கிறார். கதாநாயகர்களாக மாறிவரும் நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் சமீபத்திய இணைப்பு கருண