January 3, 2008
காதல், கல்லூரி படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் தன் அடுத்தப் படத்துக்குத் தயாராகிவிட்டார். முதல் இரண்டுப் படங்கள் ஷங்கரின் S பிக்சர்ஸுக்காக இயக்கிய பாலாஜி சக்திவேல் தன் அடுத்தப் படத்தை இன்னொரு இயக்குநர் லிங்குசாமிக்காக இயக்குகிறார்.
இயக்குநரின் நண்பரான லிங்குசாமி காதல் படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நிகழவில்லை. ஆனால் இப்போது ஒரு திரைப்படத்துக்காக நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.
படத்தின் கதையை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் பாலாஜி. இது முடிவானதும் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அறிவிக்கப்படும்.
யதார்த்தமான வாழ்க்கை